மனிதரில் தேவம், மனுஷம், ராட்சஷம் போன்ற குணங்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்த பொருத்தம் அமையும் கணவன் மனைவிக்குள் திருப்தி நிலை ஏற்பட்டு அயன, சயன, யோக, பாக்ய என்கிற தாம்பத்ய உறவில் தென்றல் வீசும்.
ஒருவருக்கொருவர் வசியமாதல், அதாவது கணவனோ அல்லது மனைவியோ சிறு சிறு தவறுகள் செய்தாலும் கூட அவர்கள் மீது ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுத்தும். இது இல்லையென்றால் சக்களத்தி வரவும்
வாய்ப்புண்டு.
27 நட்சத்திரங்களை சிரசு, கண்டம், உதரம், தொடை, பாதம் என 5 வகையாக பிரித்து ஒரே வகையுள்ள கணவன் மனைவி நட்சத்திரங்கள் பொருந்தாது என அறிவித்துள்ளனர். இப் பொருத்தம் மிக மிக முக்கியம். புருஷன் மற்றும் மனைவிக்கு கண்டங்கள் இன்றி புத்திர சம்பத்துடன், செல்வ நிலையுடன், ஸ்தல யாத்திரைகள் பல செய்து இன்பமுடன் வாழ்வார்கள்.
இப்பொருத்தம் அமையப்பெற்றால் கணவன் மனைவிக்குள் எதிர்மறையான கருத்துக்கள் வராது. இது அமையாத போது கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என பிரிந்து வாழ்ந்தே பெரும் நாட்கள் கழியும்.